மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது + "||" + Petrol and diesel prices fall in Chennai

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது.  இதனால் வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.  அதன்பின்பும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த அக்டோபரில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கியது.  தொடர்ந்து ரூ.87க்கு மேல் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை குறைய தொடங்கியது.  இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது.  பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு இன்று 10 காசுகள் குறைந்து ரூ.72.82க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோன்று டீசல் விலை 15 காசுகள் குறைந்து ரூ.68.26க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கிடுகிடுவென உயரும் பெட்ரோல், டீசல் விலை ! வாகன ஓட்டிகள் கலக்கம்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இன்று பெட்ரோல் விலை 18 காசுகள் உயர்ந்துள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
4. பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தினந்தோறும் உயரத்துவங்கியுள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.