மாநில செய்திகள்

மோடி அலை ஓய்ந்து விட்டது! பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர் + "||" + Modi wave is over! In parliamentary elections Bharatya Janata will be defeated-  Tirunavukkarasar

மோடி அலை ஓய்ந்து விட்டது! பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்

மோடி அலை ஓய்ந்து விட்டது! பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்
மோடி அலை ஓய்ந்து விட்டது. பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மகத்தான ஆதரவை தந்துள்ளனர்.  ராகுல்காந்தியின் கடும் உழைப்பு பயன் தந்துள்ளது.

பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் என்றும்,  பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் காந்தி என இந்த தேர்தலில் நிரூபணமாகியுள்ளது.

காங்கிரஸ்  மன்னிப்பு கேட்க வேண்டுமென, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஏமாற்றத்தின் விரக்தியில் பேசுகிறார்.

வாக்குறுதியை நிறைவேற்றாததால் மோடி அலை ஓய்ந்து விட்டது. பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி கும்பகோணத்தில் பரபரப்பு
கும்பகோணத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம் - ப.சிதம்பரம் பேச்சு
பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
3. மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய மக்கள் விரும்புகிறார்கள் - மோடியின் சகோதரர் பேட்டி
மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக ராமேசுவரத்தில் மோடியின் சகோதரர் கூறினார்.
4. மதத்தின் பெயரால் மக்களை துண்டாட பா.ஜ.க. சூழ்ச்சி செய்கிறது - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
மதத்தின் பெயரால் மக்களை துண்டாட பா.ஜ.க. சூழ்ச்சி செய்வதாக உச்சிப்புளியில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
5. இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றச்சாட்டு
இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டினார்.