சேவை வரி விவகாரம்: நடிகர் விஷால் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு


சேவை வரி விவகாரம்: நடிகர் விஷால் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 10:22 PM GMT (Updated: 11 Dec 2018 10:38 PM GMT)

நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சேவை வரித்துறை அதிகாரிகள் கடந்த 2016–ம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பினர்.

சென்னை, 

பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் விஷால் மீது சேவை வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது நடிகர் விஷால் ஆஜரானார். இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு கடந்த மாதம் 23–ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் ஆஜராகவில்லை.

இதையடுத்து தள்ளிவைக்கப்பட்ட அந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கும் நடிகர் விஷால் ஆஜராகவில்லை. விஷால் கோர்ட்டில் ஆஜராக இயலாததற்கான காரணத்தை தெரிவித்து அவரது வக்கீல் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 2–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story