கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தேர்தல் ஆணையர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தேர்தல் ஆணையர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Dec 2018 10:31 PM GMT (Updated: 11 Dec 2018 10:31 PM GMT)

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17–ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை, 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதன்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது தி.மு.க. கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘வார்டு மறுவரையறை தொடர்பாக சட்டம் கொண்டுவரப்பட்டு அதன்படி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையை மட்டும் குற்றம்சாட்ட முடியாது’ என்றார்.

வழக்கு விசாரணையை 18–ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்று மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான், செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story