மாநில செய்திகள்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு + "||" + Royapettai party office admk Meeting of District Secretaries

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை, 

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் பங்கேற்று விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழங்கினர். விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அதற்கான களப்பணிகளை தீவிரமாக கையாள வேண்டும், ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்கும் நிலையில் முழு உழைப்பையும் திரட்டி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற ஒற்றுமையுடனும், உறுதியுடனும் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளன.

மாலை 5.15 மணிக்கு தொடங்கிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாலை 6.15 மணிக்கு முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலையொட்டியோ அல்லது அதற்கு முன்பாகவோ தமிழகத்தில் இடைத்தேர்தல் வரலாம். இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தேர்தல் களப்பணி குறித்து முடுக்கி விடப்பட்டு இருக்கிறது.

பலவீனமாக இருப்பவர்கள் தான் 4 பேரை கூட்டணியில் சேர்ப்பார்கள். பலமாக உள்ளவர்கள் கூட்டணியில் சேரவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் பலமாக இருக்கிறோம். தேர்தல் சமயத்தில் எங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களை சேர்ப்போம். யாரை சேர்ப்போம்? என்பதை கட்சி தலைமை முடிவு செய்வோம்.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளும் மக்களின் தீர்ப்பை காட்டுகிறது. இந்த தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்று கேட்கிறார்கள். சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கும். மாநில தேர்தல் தீர்ப்புகளின் முடிவை வைத்து நாடாளுமன்ற தேர்தல் முடிவை கணிக்க முடியாது.

தமிழகத்தில் ஒரே அலை என்பது அம்மாவின் அலை மட்டுமே. அதுவே தமிழகத்தின் நிலை. பிற மாநிலங்களில் மோடி அலை ஓய்ந்துவிட்டதா? என்பதை பா.ஜ.க. தலைமையிடம் தான் கேட்கவேண்டும். மேலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச இது நல்ல நேரம் கிடையாது. அதுகுறித்து கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூடி தான் முடிவு எடுக்கமுடியும். பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும்.

டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதாக வெளிவரும் செய்திகள் தவறானது. அ.தி.மு.க. என்பது இமயமலை போன்றது. அதனுடன் நேற்று முளைத்த காளான்களை ஒப்பிடுவது சரியல்ல. என்னை பொறுத்தவரை தி.மு.க.வுடன் தான் அவர்களுக்கு இணக்கம் இருக்கிறது. நாளைக்கே கூட டி.டி.வி.தினகரன் கூட தி.மு.க.வில் இணையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஓசூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
ஓசூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ணரெட்டி கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
2. அ.தி.மு.க. கரை வேட்டியை தினகரன் அணியினர் பயன்படுத்த கூடாது; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
அ.தி.மு.க. கரை வேட்டியை தினகரன் அணியினர் பயன்படுத்த கூடாது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
3. அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு வராது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூறினார்.
4. தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்தான திட்டங்களை தடுப்பதற்கு ஏன் அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை - வைகோ கேள்வி
தமிழ்நாட்டுக்கு வருகிற ஆபத்தான திட்டங்களை தடுப்பதற்கு ஏன் அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை என்று வெள்ளகோவிலில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் வைகோ கேள்வி எழுப்பினார்.
5. அ.தி.மு.க.வை தினகரனால் இனி தொட்டுக்கூட பார்க்க முடியாது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
அ.தி.மு.க.வை தினகரனால் இனி தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.