சென்னையில் பெட்ரோல் விலை இன்று உயர்ந்தது


சென்னையில் பெட்ரோல் விலை இன்று உயர்ந்தது
x
தினத்தந்தி 13 Dec 2018 3:36 AM GMT (Updated: 13 Dec 2018 3:39 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது.  இதனால் வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.  அதன்பின்பும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் ரூ.87க்கு மேல் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை  கடந்த அக்டோபரில் குறைய தொடங்கியது.  இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.  தொடர்ந்து பெட்ரோல் விலை குறைந்து ரூ.72 வரைக்கும், டீசல் விலை ரூ.70க்கு கீழே குறைந்தும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று ஒரு லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலையானது 3 நாட்களாக விலை மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.68.26க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில் பெட்ரோல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

Next Story