வரும் 15, 16-ம் தேதிகளில் தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்


வரும் 15, 16-ம் தேதிகளில் தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 13 Dec 2018 7:30 AM GMT (Updated: 13 Dec 2018 7:30 AM GMT)

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நாளை புயலாக மாறுகிறது. இதனால் வரும் 15, 16-ம் தேதிகளில் தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை

சென்னை வானிலை மைய இயகுனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடலில்  நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுவடைந்து நாளை  புயலாக மாறும். இதனால் வரும் 15, 16-ம் தேதிகளில் தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக  மாறி நாளை சென்னை மற்றும் வடதமிழகம் நோக்கி நகரத் தொடங்கும்.

அடுத்த 48 மணி நேத்தில் இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும்.

இதன் காரணமாக வருகிற 15-ந்தேதியும், 16-ந்தேதியும் 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியிலும், தெற்கு ஆந்திராவிலும் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும். குறைந்த நேரத்தில் அதிக அளவில் மழை கொட்டும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story