மாநில செய்திகள்

மாணவர்களுடன் தொடர்புபடுத்தியதால்5 மாணவிகள் தற்கொலை முயற்சி + "||" + Five students have attempted suicide because of their relation with students...

மாணவர்களுடன் தொடர்புபடுத்தியதால்5 மாணவிகள் தற்கொலை முயற்சி

மாணவர்களுடன் தொடர்புபடுத்தியதால்5 மாணவிகள் தற்கொலை முயற்சி
மாணவர்களுடன் தொடர்புபடுத்தி வகுப்பறை பலகையில் எழுதியதால் எலி மருந்தை தின்று 5 மாணவிகள் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த அரசம்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பில் 35 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இருபாலர் பயிலும் அப்பள்ளியில் கடந்த 12-ம் தேதி மாணவிகள் சிலரை மற்ற மாணவர்களுடன் தொடர்புபடுத்தி ஒரு சில மாணவர்கள் வகுப்பறை கரும்பலகையில் நையாண்டி செய்து எழுதியுள்ளனர். இதைக் கண்ட மாணவிகள் 5 பேர் மனமுடைந்து பள்ளியின் இடைவேளையிலேயே வீட்டிற்குச் சென்று எலி மருந்தை தின்றுள்ளனர்.

சிறிதுநேரத்தில் அவர்கள் வாந்தி எடுக்கவும், பெற்றோர் அவர்களை சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பின்னர் மீண்டும் நேற்று வயிற்றுவலி, வாந்தி என கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சங்கராபுரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.