குட்கா வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்


குட்கா வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
x
தினத்தந்தி 15 Dec 2018 7:02 AM GMT (Updated: 15 Dec 2018 7:02 AM GMT)

குட்கா வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.

சென்னை,

ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் சென்னை தொழில் அதிபர் மாதவராவ் உள்பட 6 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

அவர்கள் 6 பேர் மீதும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முதற்கட்டமாக  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக இந்த வழக்கில் அரசியல்வாதிகள், அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு குறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. போலீசார் ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சோதனை நடத்தினார்கள். பின்னர் அவரது உதவியாளர் சரவணனிடம் தொடர்ந்து 2 நாட்கள் சி.பி.ஐ. போலீசார் விசாரித்தார்கள்.

இந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், முன்னாள் அமைச்சர் ரமணாவுக்கும் சி.பி.ஐ. போலீசார் நேற்று சம்மன் அனுப்பினார்கள். இந்த சம்மனில், அவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த சம்மனை ஏற்று  முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர் ஆனார்.

Next Story