மாநில செய்திகள்

கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை: கமல்ஹாசன் + "||" + could not participate in the karunjanidhi statue opening ceremony: Kamal Hassan

கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை: கமல்ஹாசன்

கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை: கமல்ஹாசன்
கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.


சிலை திறப்பு விழாவில் அகில இந்திய  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில்,  கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறியதாவது:- “ திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக இப்போது செல்கிறேன். கருணாநிதியின் மீது எப்போதுமே என்றைக்குமே எனக்கு மரியாதை உண்டு. ஏற்கெனவே நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டதால் செல்லவேண்டிய நிலை.

அதனால்தான் சிலை திறப்பு விழாவுக்கு வருவேன் என்று சொல்லவே இல்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் எந்த அரசாக இருந்தாலும் மக்களை மதித்து நடக்க வேண்டும்.தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஸ்டெர்லைட் பற்றிய கருத்தும் முடிவும் ஏற்புடையதாக இல்லை. இந்தத் தீர்ப்பில் உடன்பாடில்லை” இவ்வாறு  தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொலை
சென்னையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
2. மாநில பால் பேட்மிண்டன் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்
மாநில பால் பேட்மிண்டன் போட்டி, சென்னையில் இன்று தொடங்க உள்ளது.
3. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னைக்கு அகல நடைபாதை
இத்திட்டம் பற்றி சந்தேகங்கள் வலுத்திருக்கும் நிலையில், சென்னையில் இதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன; சில நகரங்கள் இதில் முன்னிலையிலும், வேறு சில நகரங்கள் பின் தங்கியும் உள்ளன.
4. செங்கல்பட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தி.மு.க. ஊராட்சி கழக செயலாளர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார்.
5. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.