அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி


அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் -  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
x
தினத்தந்தி 17 Dec 2018 6:52 AM GMT (Updated: 17 Dec 2018 6:52 AM GMT)

யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை  ரத்து செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது.  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது. 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிகூறியதாவது: “ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதால் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் தீர்ப்பு தொடர்பாக, ஓரிரு வாரங்களில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story