மாநில செய்திகள்

குட்கா வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சை உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை + "||" + Regarding the Gudka case CBI searches at 3 places in Chennai, Tanjavore

குட்கா வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சை உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

குட்கா வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சை உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
குட்கா வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சை உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,

தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, போலீஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட அரசு ஊழியர்களுக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கடந்த 2016-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சிக்கிய ரகசிய டைரி மூலம் இந்த தகவல்கள் அம்பலமானது.


அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எந்தெந்த தேதியில் எவ்வளவு தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரம் தேதிவாரியாக அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த டைரி தகவலை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்த தமிழக அரசுக்கு வருமானவரித் துறை பரிந்துரை செய்தது. ஆனால் விசாரணை தாமதமானதால் சி.பி.ஐ விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் டெல்லி சி.பி.ஐ அதிகாரிகள் குட்கா ஊழல் வழக்கை விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது குட்கா ஊழல் வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை தீவிரமடைந்து உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ அதிகாரிகள் சென்னை வந்து கடந்த ஒருவாரமாக முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. உதவியாளர் சரவணனிடம் 3 நாட்கள் விசாரணை நடந்து உள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் 2 நாட்கள் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவரிடம் சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான கேள்விகளை கேட்டு விசாரித்தனர். குறிப்பாக அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது சி.பி.ஐ ஆவணங்கள் மற்றும் டைரி குறிப்புகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடந்தது.

இந்நிலையில் குட்கா வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் தஞ்சாவூர் உட்பட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சீனிவாசனுக்கு சொந்தமான இடம் மற்றும் கார்த்தி வேலு என்பவருக்கு சொந்தமான 2 இடங்களில் சிபிஐ குட்கா வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சை உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் செய்கிறார்
சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் செய்கிறார் என தேமுதிக அறிவித்துள்ளது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மல்லுகட்டுகின்றன.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-மும்பை அணிகள் இன்று இரவு மும்பையில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
4. பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்
5. 4 வயதில் நெதர்லாந்து குடும்பத்தால் தத்தெடுப்பு: சென்னையில், பெற்றோரை தேடி அலையும் வாலிபர் வளர்ப்பு தாயும், சகோதரரும் உதவுகிறார்கள்
4 வயதில் நெதர்லாந்து குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்ட வாலிபர், தற்போது தனது பெற்றோரை தேடி சென்னையில் அலைகிறார். அவருக்கு உதவியாக அவரது வளர்ப்பு தாயும், சகோதரரும் உதவியாக இருக்கிறார்கள்.