மாநில செய்திகள்

விதிமீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி + "||" + Why no action against infringing banners? HC

விதிமீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

விதிமீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி
விதிமீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் சாலையோரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பேனர்கள் வைப்பதற்கு என சில விதிமுறைகள் உள்ளன.  இந்த நிலையில், சில இடங்களில் விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்படுகின்றன என புகார்கள் எழுந்தன.  விதிமீறல் பேனர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுபற்றிய விசாரணையில் நீதிபதிகள், விதிமீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பினர்.

அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், மக்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்பீர்களா?  நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு, விருப்பப்பட்ட கட்சியில் இணைந்து பணியாற்றலாமே என்றும் அவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி விரிவான விளக்கம் அடங்கிய அறிக்கையை நாளை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோடநாடு விவகாரம்; மனோஜ், சயானை திங்கட்கிழமை வரை கைது செய்ய கூடாது: உயர் நீதிமன்றம்
கோடநாடு விவகாரத்தில் மனோஜ், சயானை திங்கட்கிழமை வரை கைது செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
2. 'இளையராஜா 75' நிகழ்ச்சியை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி
'இளையராஜா 75' நிகழ்ச்சியை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
3. இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பினை ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்
இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பினை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
4. 'இளையராஜா 75' விழாவை ஏன் ஒத்தி வைக்க கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி
'இளையராஜா 75' விழாவை ஏன் ஒத்தி வைக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
5. விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீரை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை உடனடியாக துண்டிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...