மாநில செய்திகள்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு; லஞ்சம் பெற்று பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு + "||" + Government land occupation; Order to act against bribed officials

அரசு நிலம் ஆக்கிரமிப்பு; லஞ்சம் பெற்று பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரசு நிலம் ஆக்கிரமிப்பு; லஞ்சம் பெற்று பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோரிடம் லஞ்சம் பெற்று கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,

சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 பேர் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என கூறப்படும் இடங்களுக்கு தங்களிடம் பட்டா உள்ளது என்றும் அதனால் தங்களை அங்கிருந்து அகற்ற உத்தரவிட கூடாது என கோரியிருந்தனர்.

இதுபற்றிய வழக்கு விசாரணையில், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோரிடம் லஞ்சம் பெற்று கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுபற்றி 4 வாரங்களுக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டுமென்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உள்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து அவர், நீர்நிலைகளை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து அரசு கடமை தவறி விட்டது.  இதுபோன்று லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
2. விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தாரின் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில், தாசில்தாரின் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
3. லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: 2 சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
மதுரை அருகே லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய 2 சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
4. வீட்டு மனை அனுமதிக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
வீட்டு மனை அனுமதிக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார்.
5. லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்
லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.