வீடுகள் கட்டுவதற்கு லஞ்சம்: அதிகாரியை கடிந்து கொண்ட கமல்ஹாசன்


வீடுகள் கட்டுவதற்கு லஞ்சம்: அதிகாரியை கடிந்து கொண்ட கமல்ஹாசன்
x
தினத்தந்தி 18 Dec 2018 9:15 PM GMT (Updated: 18 Dec 2018 9:15 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

திண்டுக்கல், 

நடிகர் கமல்ஹாசன் பெரும்பாறை, மலையக்காடு, கோரங்கொம்பு, கே.சி.பட்டி, பாச்சலூர், குரங்கணிபாறை உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, அரசு வீடு கட்டும் திட்டத்துக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியின் செல்போன் எண் குறித்த விவரங்களை கமல்ஹாசன் கேட்டார். பின்னர் அந்த எண்ணுக்கு, அவரே செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அரசு திட்டத்தில் வீடு கட்ட ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதற்கு முன் பணமாக ரூ.50 ஆயிரம் எதுவும் கொடுக்க வேண்டுமா? என அதிகாரிகளை கடிந்து கொண்டார். இதையடுத்து அவர் பொதுமக்களிடம் வீடு கட்டுவதற்கு யாரேனும் பணம் கேட்டால் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் கூறுங்கள் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார்.

Next Story