மாநில செய்திகள்

ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார் + "||" + IG pon.manikkavel Today police officers Complaint at DGP office

ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார்

ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார்
சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது இன்றும் போலீஸ் அதிகாரிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
சென்னை,

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கடந்த மாதம் (நவம்பர்) 30–ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற இருந்த நிலையில், ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதாவது சி.பி.ஐ.க்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்ததோடு, ஓய்வு பெறும் பொன். மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது.

இதற்கு தடை கோரி தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவரது பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது அந்த பிரிவில் பணியாற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்பட 12 காவல் அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதில், சிலை கடத்தல் வழக்கில் உரிய ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் வழக்கு பதிவு செய்ய வற்புறுத்தப்படுகிறது.

இந்த வற்புறுத்தலை மீறும் அதிகாரிகளை சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் திட்டியும், மிரட்டியும் வருகிறார் என அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.  இதனால் இந்த பிரிவில் இருந்து அவர்கள் பணிமாறுதல் கேட்டு உள்ளனர்.

இதுபற்றி நடவடிக்கை எடுக்க பரிசீலனை மேற்கொள்ளப்படும் என டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்றும்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் 11 போலீஸ் அதிகாரிகள்  குற்றஞ்சாட்டினர்.

இது குறித்து ஏடிஎஸ்பி இளங்கோ கூறியதாவது:-

சிலைக்கடத்தல் வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க பொன். மாணிக்கவேல் எங்களை விடவில்லை . சிலைக்கடத்தல் விவகாரத்தில் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றினோம். காணாமல் போன் பல சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. தான் சுட்டிக்காட்டும் நபர்களை மட்டுமே கைது
செய்ய வேண்டும் என்கிறார்.  சிலை கடத்தல் வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை  என கூறினார். 333 வழக்குகள் உள்ளன. அதில் ஒரு சில வழக்குகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன .

தனித்தனி விசாரணை அதிகாரிகள் இருந்தும் அவர்களை சுதந்திரமாக பணி செய்ய பொன். மாணிக்கவேல் அனுமதிக்கவில்லை. காணாமல் போன சிலைகள் பலவற்றை மீட்க முயற்சி எடுக்கவில்லை. ஆனால் கைது செய்ய நிர்பந்திக்கிறார். பொன். மாணிக்கவேல் தலைமையில் எங்களால் செயல்பட முடியாது  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது -சென்னை ஐகோர்ட்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.