தென் தமிழகத்தில் வரும் 21-ம் தேதி பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்


தென் தமிழகத்தில் வரும் 21-ம் தேதி பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 19 Dec 2018 10:20 AM GMT (Updated: 19 Dec 2018 10:20 AM GMT)

தென் தமிழகத்தில் வரும் 21-ம் தேதி பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், உள் தமிழக மாவட்டங்களில் மூடு பனி அதிகம் நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-

பருவமழை காலங்களில் வீசும் கிழக்கு திசை காற்றின் காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல் தென் கிழக்கு வங்க கடலில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 21-ம் தேதி தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் உள் தமிழக மாவட்டங்களில் மூடு பனி அதிகம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை எனவும், சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Next Story