மாநில செய்திகள்

எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம்; நடிகர் ரஜினிகாந்த் + "||" + We have registered for the name of TV in my name; Actor Rajinikanth

எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம்; நடிகர் ரஜினிகாந்த்

எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம்; நடிகர் ரஜினிகாந்த்
எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,

ரஜினி தனது கட்சிக்காக புதிய டி.வி. சேனல் தொடங்க போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் மொத்தம் 6 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக சூப்பர் ஸ்டார் டி.வி., ரஜினி டி.வி., தலைவர் டி.வி. ஆகிய மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த 3 பெயர்களில் “சூப்பர் ஸ்டார் டி.வி.” எனும் பெயருக்கு முன்னுரிமை கொடுத்து டி.வி. சேனல் பெயருக்கு அனுமதி வழங்கும்படி சுதாகர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினியும் “டிரேடு மார்க்”கை பதிவு செய்யும் அதிகாரிக்கு தனியாக ஒரு கடிதம் கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் கூறும்பொழுது, புது வருடத்தில் மக்கள் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க பிரார்த்திக்கிறேன் என கூறினார்.

தொடர்ந்து பொங்கலுக்கு வெளிவர தயாராக உள்ள பேட்ட திரைப்படம் பற்றி கூறுங்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு அவர் பேட்ட திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் என கூறினார்.  எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், நான் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை.  கட்சி ஆரம்பித்த பின்னர் கூட்டணி பற்றி பேசலாம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டி இல்லை; நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டி இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
2. காஷ்மீர் தாக்குதல்; காட்டுமிராண்டி செயல்களுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளது: நடிகர் ரஜினிகாந்த்
காட்டுமிராண்டி செயல்களுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளது என காஷ்மீர் தாக்குதல் சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
3. ரஜினியின் 'பேட்ட' படத்தின் டிரெய்லர் எப்படி உள்ளது?
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
4. 5 மாநில தேர்தல் முடிவுகள் : பாரதீய ஜனதா தனது செல்வாக்கை இழந்துள்ளது-நடிகர் ரஜினிகாந்த்
5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாரதீய ஜனதா தனது செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
5. ‘குழந்தைகள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை நடிகர் ரஜினிகாந்த் கடும் தாக்கு
குழந்தைகள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...