நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயார்; அமைச்சர் ஜெயக்குமார்


நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயார்; அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 23 Dec 2018 7:07 AM GMT (Updated: 23 Dec 2018 7:07 AM GMT)

நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழக மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வருகையால் தி.மு.க. வாக்கு வங்கியே பாதிக்கப்படும்.  அ.தி.மு.க.வின் வாக்கு வங்கிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.

ரஜினியால் அ.தி.மு.க.வின் வாக்குகளை பிரிக்க முடியாது.  தி.மு.க. மற்றும் பிற கட்சிகளின் வாக்குகளைதான் அவர் பிரிப்பார்.  ரஜினிகாந்த் தொலைக்காட்சி தொடங்கினால் அது தி.மு.க.வுக்குதான் பாதிப்பு என கூறினார்.

தொடர்ந்து அவர், கஜா புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு வருகிறார் என்றால் பா.ஜ.க.தான் பதில் சொல்ல வேண்டும்.  கஜா புயலால் 2 லட்சம் மின்கம்பங்கள் உலகத்திலேயே எங்கேயும் விழுந்திருக்காது.  நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

கணினி தகவல்கள் கண்காணிப்பு என்பது மருத்துவர் கையில் உள்ள கத்தி போன்று இருக்க வேண்டும்.  கொலைகாரன் கையில் இருக்கும் கத்திபோல் மாறிவிடக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Next Story