காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு இல்லை : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு இல்லை : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 27 Dec 2018 12:01 AM GMT (Updated: 27 Dec 2018 12:01 AM GMT)

சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை,

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் தான் 5 மீனவர்களை தூக்கில் இருந்து மீட்டெடுத்தார். மத்திய அரசு ஏராளமான நல்ல திட்டங்களை மக்களின் நலனுக்காக செயல்படுத்தியுள்ளது. இதனை மக்கள் அறிந்தால், மோடியின் பக்கம் சென்றுவிடுவார்கள் என்பதற்காக தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் தவறாக திரித்து கூறி வருகின்றனர்.

ஜனவரி 5, 6-ந்தேதிகளில் வாக்குச்சாவடி அளவில் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் கூட்டங்கள் நடத்த உள்ளோம். இதேபோல ஜனவரி 26-ந்தேதியன்று எல்லா கிளை அலுவலகங்களிலும் பிரசாரம் செய்யப்படும். தமிழர்கள் மீது மோடி மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறார்.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்னிலைப்படுத்தியதால் அவர்கள் கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதனால் 3-வது அணி தான் பலம் பெறும். ஆனால் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story