நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பதில்


நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பதில்
x
தினத்தந்தி 27 Dec 2018 12:08 AM GMT (Updated: 27 Dec 2018 12:08 AM GMT)

சென்னையில் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கு பெற்று, அவர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.

சென்னை,

டி.டி.வி.தினகரன்  நிருபர்களுக்கு பின்னர் பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள், நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பேசப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு டி.டி.வி.தினகரன் அளித்த பதில் வருமாறு:-

நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைக்க போவதில்லை. மாநில நலனை மாநில கட்சிகள் தான் நிறைவேற்ற முடியும். அதனால் ஒரு சில கட்சிகளோடு, எங்களுடன் வரவேண்டும் என்று உணர்வோடு இருக்கும் கட்சிகளோடு பேசிக்கொண்டு இருக்கிறோம். இதில் குழப்பநிலை எதுவும் இல்லை.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யாரை நம்பியும் இல்லை. இது ஜெயலலிதாவின் தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. கூட்டணியை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் ஒரு மித்த மனநிலையில் உள்ள சிலர் எங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த உணர்வு உள்ளவர்களோடு நாங்களும் பேசுகிறோம். அவர்களோடு இறுதி முடிவு எட்டப்பட்டால் சேர்ந்து போட்டியிடுவோம். இல்லையென்றால் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனியாக நின்று போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story