பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்


பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 27 Dec 2018 1:40 PM GMT (Updated: 27 Dec 2018 1:40 PM GMT)

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்.  சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 14,263 பேருந்துகள் இயக்கப்படும்.   ஜன. 9-ம் தேதி சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜன. 11 முதல் 14-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை மாநகர பயணிகளின் வசதிக்காக எம்டிசிக்கு புதிய சிவப்பு நிற பேருந்துகள் அறிமுகம். பொங்கல் அன்று சென்னையில் புதிய சிவப்பு நிற பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு திட்டம்.   பொங்கல் முடிந்து சென்னை திரும்பவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்துள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story