மாநில செய்திகள்

படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்த மகனை தட்டிக் கேட்ட தந்தை கொலை + "||" + Read and leave Not to work Came to love Father listening to the son Kill

படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்த மகனை தட்டிக் கேட்ட தந்தை கொலை

படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்த மகனை தட்டிக் கேட்ட தந்தை கொலை
படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்ததைத் தட்டிக் கேட்ட தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு  கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் அவ்வப்போது தந்தையிடம் பணம் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார் . இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை விக்னேஷ் காதலித்து வந்தது தந்தை சுந்தரராமனுக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை சுந்தரராமனின் தலையில் கல்லைப் போட்டு விக்னேஷ் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த தண்டராம்பட்டு காவல்துறையினர் சுந்தரராமன் உடலை மீட்டதுடன் விக்னேஷை கைது செய்தனர்.

சமீபத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கல்லூரி மாணவி ஒருவர் குத்திக்கொன்ற கொடூர சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.