6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்


6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 29 Dec 2018 3:54 PM GMT (Updated: 29 Dec 2018 3:54 PM GMT)

6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை,

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் பலர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது என கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து 6 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

Next Story