மாநில செய்திகள்

தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை: வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24 % குறைவு + "||" + There is no expected amount of rain in Tamil Nadu; Northeast monsoon is 24% less than normal

தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை: வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24 % குறைவு

தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை:   வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24 % குறைவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24 சதவீதம் குறைவு. தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை,

சென்னை வானிலை  ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை 24 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. வடகிழக்கு பருவமழை பதிவான அளவு 34 செ.மீ. இது வழக்கத்தைவிட 24 சதவிகிதம் குறைந்துள்ளது. வானிலை நிகழ்வுகள் சாதகமாக இல்லாததே பருவமழை குறைவுக்கு காரணம் . எல் நினோ உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தள்ளிப்போனதால் மழை இல்லை.  4 புயல்களில்  காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்பட்டது. அதனாலேயே மழையின் அளவு குறைந்து உள்ளது.

சென்னையில் இயல்பைவிட 55 சதவீதம்  மழை குறைவாக பதிவாகியுள்ளது என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
3. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
4. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
5. அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.