மாநில செய்திகள்

ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு + "||" + tiruvarum By election date announced

ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை, 

கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “ வேட்பு மனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி துவங்கும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 10 ஆம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14 ஆம் தேதி கடைசி நாளாகும். 

ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரும் இந்திய கம்யூனிஸ்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 7-ந் தேதி விசாரணை
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரும் இந்திய கம்யூனிஸ்டு மனு மீதான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் 7-ந் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.
2. தேர்தல் ஆணையம் விரும்பினால் மக்களவைத் தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலையும் நடத்த முடியும் - மத்திய அரசு
தேர்தல் ஆணையம் விரும்பினால் மக்களவைத் தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலையும் நடத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு
திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
4. ராஜஸ்தானில் காங்கிரஸ் 7, பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 7, பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க உதவும் குழுக்கள் - தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தலில் சிரமமின்றி வாக்களிப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் குழுக்கள் அமைக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.