சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின் மரியாதை


சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 1 Jan 2019 1:04 PM IST (Updated: 1 Jan 2019 1:04 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் சென்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.

சென்னை,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவரான கருணாநிதி (வயது 95) உடல் நல குறைவால் கடந்த ஆகஸ்டு 7ந்தேதி மாலை காலமானார்.

அவரது உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.  அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சந்தன பேழையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஒய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், புது வருடம் தொடங்கிய நிலையில், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.

Next Story