அரசு டாக்டரை தாக்கிய பாஜக தலைவர் கைது


அரசு டாக்டரை தாக்கிய பாஜக தலைவர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2019 1:52 PM IST (Updated: 1 Jan 2019 1:52 PM IST)
t-max-icont-min-icon

அரசு டாக்டரை தாக்கியதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவரை முத்துப்பேட்டை போலீசார் கைது செய்து உள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அரவிந்த் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துள்ளார். அவர்  கொடுத்த மருந்தினால் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், மேலும் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து டாக்டர் அரவிந்துடன்  மாவட்ட பாஜக தலைவர் சிவா வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். மேலும் டாக்டரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து  சிவாவை  முத்துப்பேட்டை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Next Story