பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்


பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:31 AM GMT (Updated: 2 Jan 2019 10:31 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த  தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி அளித்தது. மேலும், ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசும், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.  இந்த நிலையில்,  தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஆலைக்கு மின்சாரம் வழங்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்து இருந்தது.  

இதற்கு பதிலளித்த தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருப்பதால், பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது எனவும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

Next Story