அ.தி.மு.க.வில் விருப்ப மனு தாக்கல் தொடங்கியது முதல் நாளில் 25 பேர் மனு செய்தனர்

அ.தி.மு.க.வில் விருப்ப மனு தாக்கல் தொடங்கியது முதல் நாளில் 25 பேர் மனு செய்தனர்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:30 AM IST (Updated: 3 Jan 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதி.மு.க.வினரிடம் இருந்து நேற்று விருப்ப மனு பெறப்பட்டது. நேற்று முதல் நாளில் மட்டும் 25 பேர் மனுதாக்கல் செய்தனர்.

சென்னை, 

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதி.மு.க.வினரிடம் இருந்து நேற்று விருப்ப மனு பெறப்பட்டது. நேற்று முதல் நாளில் மட்டும் 25 பேர் மனுதாக்கல் செய்தனர்.

திருவாரூர் இடைத்தேர்தல்

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு 28-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் நேற்று காலை முதல் இன்று (வியாழக்கிழமை) மாலை வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளிக்க என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி, திருவாரூர் தொகுதியில் போட்டியிட நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி பலர் விருப்ப மனுத் தாக்கல் செய்தனர். அமைச்சர் காமராஜர் விருப்ப மனு வினியோகத்தை தொடங்கி வைத்தார். திருவாரூர் தொகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஸ்ரப் முதல் மனுவை தாக்கல் செய்தார்.

இதில், திருவாரூர் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வம் உள்பட 25 பேர் நேற்று விருப்ப மனு அளித்தனர்.

Next Story