திருவாரூரில் நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது நாளை தெரியும்: மு.க. ஸ்டாலின்


திருவாரூரில் நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது நாளை தெரியும்:  மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 3 Jan 2019 2:03 PM IST (Updated: 3 Jan 2019 2:03 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது நாளை தெரியும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 3ந்தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவும் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுமார் 40 பேர் மனு செய்துள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு அளிக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து பூண்டி கலைவாணன் மனு செய்துள்ளார்.

இந்த நிலையில், திருவாரூரில் நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது நாளை தெரியும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story