திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டி -திமுக அறிவிப்பு


திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டி -திமுக அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 12:54 PM GMT (Updated: 4 Jan 2019 12:54 PM GMT)

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி  நடைபெறுகிறது. தமிழகத்தில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முக்கிய பங்கு வகிப்பதால் அதிகமான சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட களம் இறங்குகின்றனர்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளருக்கான நேர்காணலை நடத்தி வருகிறது. இதனால் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என பெரும் எதிர்ப்பார்ப்பு தொகுதி மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் திருவாரூர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. அதனைதொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தோழமை கட்சிகளின் ஆதரவுபெற்ற பூண்டி கலைவாணன் திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவார் என்றார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூண்டி கலைவாணன் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட செயலாளராக உள்ளார். திருவாரூரில் வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு ஜனவரி 31-ல் முடிவுகள் வெளியாகிறது.

Next Story