திருவாரூர் தேர்தல்: கருத்துகளை கேட்ட பிறகே அறிக்கை அளிக்க வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்


திருவாரூர் தேர்தல்: கருத்துகளை கேட்ட பிறகே அறிக்கை அளிக்க வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Jan 2019 6:18 AM GMT (Updated: 5 Jan 2019 6:18 AM GMT)

திருவாரூர் தேர்தல் விவகாரத்தில் அனைத்து கட்சிகள், திருவாரூர் விவசாய பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருவாரூரில் 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில் திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story