மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக போராட்டம்


மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2019 6:16 AM GMT (Updated: 9 Jan 2019 6:16 AM GMT)

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றன.

சென்னை

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக போராட்டம்  நடத்தி வருகின்றன. முழு அடைப்பு போராட்டத்தால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; இன்று அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

சென்னை கிண்டியில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு சங்க தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்  நடத்தினர்.

சென்னை அண்ணா சாலையில் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 சங்கத்தை சேர்ந்த 1000த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர் விரோதப்போக்குடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக தொழிற்சங்கத்தினர் புகார் கூறி உள்ளனர்.

Next Story