மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ + "||" + Sterlite case; Let us file a petition against the SC verdict: Minister Kadambur Raju

ஸ்டெர்லைட் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் வழக்கு; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வோம்:  அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஸ்டெர்லைட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. தீர்ப்பின் முழு விவரம் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என முதல் அமைச்சர் பழனிசாமி சட்டசபையில் நேற்று கூறினார்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று ஸ்டெர்லைட் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் வழக்கு : விசாரணை அமர்வு அறிவிப்பு
ஸ்டெட்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
2. ஸ்டெர்லைட் வழக்கு : விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சசிதரன் அறிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமன தடையை நீக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்துக்கு மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
4. பட்டாசுகளுடன் ஒப்பிடும்பொழுது வாகனங்களால் அதிக மாசுபாடு ஏற்படுகிறது; சுப்ரீம் கோர்ட்டு
பட்டாசுகளுடன் ஒப்பிடும்பொழுது வாகனங்களால் அதிக மாசுபாடு ஏற்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
5. பசுமை பட்டாசுகள் தயாரிப்பு; அறிக்கை தாக்கல் செய்ய நீரி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பசுமை பட்டாசுகளை தயாரிப்பது பற்றி மார்ச் 12க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீரி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.