ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி:பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவது நிறுத்தம்; பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Pongal gift
Rs 1000 to provide
Public road stroke
ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி:பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவது நிறுத்தம்; பொதுமக்கள் சாலை மறியல்
பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவது நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
திண்டிவனம் நகராட்சி 16-வது வார்டில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று காலை நடைபெற்று வந்தது. 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் கடை ஊழியர் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி, பொருட்கள் வழங்குவதை பாதியில் நிறுத்திவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் பேசி பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பிறகு நியாய விலைக்கடை ஊழியர் கடைக்கு வரவழைக்கப்பட்டு, மீதமுள்ள 457 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம், நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று இரவுவிலும் பொங்கல் பரிசு தொகை ரூ. 1000-த்தை வழங்கும் பணி நடந்தது. பொதுமக்கள் இரவிலும் காத்திருந்து வாங்கி சென்றனர்.
கோவையில் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக வரிசையில் நின்ற 2 மூதாட்டிகள் மயக்கம் அடைந்தனர். அன்னூர் அருகே பணம் தீர்ந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நிவாரண பொருட்கள் கேட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதில் பங்கேற்றனர்.