மாநில செய்திகள்

அம்பாசமுத்திரம் அருகே ரேஷன் கடையில்ரூ.1,000 பொங்கல் பரிசு வாங்க வரிசையில் நின்ற மூதாட்டி சாவு + "||" + Buy Pongal gift of Rs 1,000 Standing in line Old Lady Death

அம்பாசமுத்திரம் அருகே ரேஷன் கடையில்ரூ.1,000 பொங்கல் பரிசு வாங்க வரிசையில் நின்ற மூதாட்டி சாவு

அம்பாசமுத்திரம் அருகே ரேஷன் கடையில்ரூ.1,000 பொங்கல் பரிசு வாங்க வரிசையில் நின்ற மூதாட்டி சாவு
அம்பாசமுத்திரம் அருகே ரேஷன் கடையில் ரூ.1,000 பொங்கல் பரிசு வாங்க வரிசையில் நின்ற மூதாட்டி வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
அம்பாசமுத்திரம்,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மணிமுத்தாறு அருகே உள்ள கீழ ஏர்மாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரம்மாச்சி (வயது 85). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இவர்களில் 2-வது மகன் முத்துப்பாண்டி என்பவர் தவிர மற்ற அனைவரும் வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். முத்துப்பாண்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உள்ளூரில் வசித்து வருகிறார். அவருடைய வீட்டின் அருகே பிரம்மாச்சி தனியாக வசித்து வந்தார்.

பொங்கல் பரிசு

இந்த நிலையில் நேற்று அதிகாலை பிரம்மாச்சி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் முத்துப்பாண்டி மற்றும் அவருடைய மனைவி முத்துமாரி ஆகியோர் அங்குள்ள டாக்டர் வீட்டுக்கு பிரம்மாச்சியை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதும் அனைவரும் வீட்டுக்கு திரும்பிவிட்டனர்.

பின்னர் காலையில் வீட்டில் வழக்கம்போல் பணிகளை பிரம்மாச்சி செய்து வந்தார். மதியம் 12 மணி அளவில் ஏர்மாள்புரம் அம்மன் கோவில் அருகில் உள்ள ரேஷன் கடையில் 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசு வாங்குவதற்காக பிரம்மாச்சி ரேஷன் கடைக்கு சென்றார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் ஏராளமானோர் வரிசையில் காத்து நின்றனர். அவர்களுடன் பிரம்மாச்சியும் வரிசையில் நின்றார்.

மயங்கி விழுந்து சாவு

அப்போது கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்ற பிரம்மாச்சி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் வரிசையில் நின்றவர்கள் பிரம்மாச்சி முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. பின்னர் தான் அவர் இறந்து போனது தெரியவந்தது.

இதுபற்றி அவரது மகன் முத்துப்பாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முத்துப்பாண்டியின் குடும்பத்தினர் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். பிரம்மாச்சியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். பின்னர் அங்கிருந்து பிரம்மாச்சியின் உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

ரூ.1,000 பொங்கல் பரிசு வாங்க வந்த இடத்தில் மூதாட்டி வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.1,400 கோடி ஊழல்: நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
பாகிஸ்தானில் ரூ.1,400 கோடி ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் குற்றவாளி என அந்நாட்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
2. ரூ.1,937 கோடி செலவில் சேலம்-செங்கப்பள்ளி வரை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
‘ரூ.1,937 கோடி செலவில் சேலம்-செங்கப்பள்ளி வரை 8 வழிச்சாலையாக மாற்றப்படும்’ என்று மகுடஞ்சாவடியில் நடந்த அரசு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
3. ரேஷன் கடைகளில் வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 வழங்குவது நிறுத்தம் ஊழியர்களிடம் வாக்குவாதம்
ஐகோர்ட்டு உத்தரவுப்படி வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.1,000 வழங்குவது நிறுத்தப்பட்டது.
4. 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு கலெக்டர் ரோகிணி தகவல்
சேலம் மாவட்டத்தில் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
5. ரூ.1,526 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்; ஐதரபாத் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுவையில் ரூ.1,526 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஐதராபாத் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்–அமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் கையெழுத்தானது.