மாநில செய்திகள்

புதிய உச்சத்தில் தங்கம் விலை! + "||" + Gold prices steady as interest rate outlook pressures dollar

புதிய உச்சத்தில் தங்கம் விலை!

புதிய உச்சத்தில் தங்கம் விலை!
பண்டிகை காலம் என்பதாலும் நாடு முழுவதும் திருமண சீசன் களை கட்ட உள்ளதாலும் தங்கத்தின் தேவை அதிகரிக்க துவங்கியுள்ளது.
சென்னை,

பண்டிகை காலம் என்பதாலும் நாடு முழுவதும் திருமண சீசன் களை கட்ட உள்ளதாலும் தங்கத்தின் தேவை அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.3000 க்கு மேல் விற்பனையாகி வந்தது. இது படிப்படியாக உயர்ந்து, இன்று ரூ.3075 என்ற புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.24- ம், ஒரு சவரன் ரூ.192- ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று, ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3075 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.32,290 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.24,600 க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.  ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.42.80 ஆக விற்பனையாகிறது. 

அதிகம் வாசிக்கப்பட்டவை