மாநில செய்திகள்

நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் என ஐகோர்ட் கிளை அறிவிப்பு + "||" + The court formation committee Jallikattu will run in Avaniyapuram HC Branch Announcement

நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் என ஐகோர்ட் கிளை அறிவிப்பு

நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் என ஐகோர்ட் கிளை அறிவிப்பு
நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் என ஐகோர்ட் கிளை அறிவித்து உள்ளது
மதுரை

மதுரை, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே முடிவெடுப்பதாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையெனில் தடை விதிக்க நேரிடும் என்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவை நீதிமன்றமே அமைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, காவல் ஆணையர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒரு மணிக்கு ஒத்திவைத்தனர். பிற்பகலில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட்  மதுரைக் கிளை கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக நிர்வாகி கொலை வழக்கு: 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் மதுரை கிளை
சிவகங்கையில் அ.தி.மு.க நிர்வாகி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.
2. பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விட்ட கட்சிகளை தடை செய்யக்கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு
கருப்பு பலூன்களை பறக்க விடுதல் மற்றும் வருகைக்கு எதிராக வசனங்களை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளை தடை செய்யக்கோரிய வழக்கில், வழக்கில் தொடர்புடைய அரசியல் கட்சிகளை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
3. தஞ்சை பெரிய கோவிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா? -ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
தஞ்சை பெரிய கோவிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்து விடுவீர்களா? என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
4. கஜா புயல் தொடர்பான மத்திய குழுவின் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் -மத்திய அரசு
கஜா புயல் தொடர்பான மத்திய குழுவின் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் என மதுரை ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு கூறி உள்ளது.
5. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் - மத்திய சுகாதாரத் துறை
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என மதுரை ஐகோர்ட் கிளையில் மத்திய சுகாதாரத் துறை கூறி உள்ளது.