மாநில செய்திகள்

சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் உயரமான சிவலிங்கம் + "||" + The world's tallest Shivalingam in the record book

சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் உயரமான சிவலிங்கம்

சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் உயரமான சிவலிங்கம்
கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயரம் கொண்ட உலகின் உயரமான சிவலிங்கம் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள செங்கல் மகேஸ்வரம் பகுதியில் சிவபார்வதி திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 111 அடி உயரத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை இது தக்க வைத்துள்ளது. இந்த நிலையில் சிவலிங்கத்தை ஆய்வு செய்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தார் உரிய சான்றிதழை வழங்கினர். இதையடுத்து இந்த சிலையானது சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.