இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தது ஏன்? டி.கே.ரங்கராஜன் பேட்டி

இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தது ஏன்? டி.கே.ரங்கராஜன் பேட்டி
x
தினத்தந்தி 10 Jan 2019 7:01 PM GMT (Updated: 10 Jan 2019 7:01 PM GMT)

காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட எல்லா கட்சிகளும் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தது. ஆம் ஆத்மி, தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன.

ஆலந்தூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட எல்லா கட்சிகளும் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தது. ஆம் ஆத்மி, தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன.

தமிழகத்தில் உள்ள நிலைமையும், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள நிலைமையும் மாறுபடும். வட மாநிலங்களில் மேல் ஜாதி என்பது பிராமணர்கள் மட்டும் அல்ல. பல ஜாதிகள் உள்ளன. தமிழகத்தில் 69 சதவீதம் தரப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் 50 சதவீதம்கூட அமலில் இல்லாத நிலை உள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடுகள் இருக்கும்போது அகில இந்திய அளவில் இதுபோன்ற மசோதா வரும்போது தேசிய கட்சிகள் சில நிலையை எடுக்க வேண்டிய நிலை வருகிறது.

கனிமொழி எம்.பி. சொன்னது போல் இந்த மசோதா பெரிய பலன் தரக்கூடியது அல்ல. இது தேர்தலுக்கான கண் துடைப்புதான். மசோதாவை ஆதரித்து ஒட்டு போட்டு இருந்தாலும், அதில் உள்ள கோளாறுகளையும் சொல்லி உள்ளோம்.

கனிமொழிக்கும், எனக்கும் எந்தவித மோதலோ, கருத்து வேறுபாடோ இல்லை. இருவரும் மசோதாவை நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கையெழுத்து போட்டு கொடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story