மாநில செய்திகள்

மீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் கலக்கம் + "||" + Petrol Price goes up second stright day

மீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் கலக்கம்

மீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் கலக்கம்
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.71.67 ஆக விற்பனையாகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணைய் விலையை பொறுத்து இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. 

அந்த வகையில், இன்று எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.71.67 ஆகவும்,  டீசல், நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 66.31 ஆகவும் விற்பனையாகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளதால் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக எண்ணைய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியையே சார்ந்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய சந்தையில் உடனடியாக எதிரொலிக்கின்றன. 


ஆசிரியரின் தேர்வுகள்...