மாநில செய்திகள்

இந்திய வானொலி நிலையம் சார்பில் சென்னையில், 22 மொழி கவிஞர்கள் பங்கேற்ற கவிதை நிகழ்ச்சி கவர்னர் தொடங்கி வைத்தார் + "||" + In Chennai, 22 language poets participated in poetry

இந்திய வானொலி நிலையம் சார்பில் சென்னையில், 22 மொழி கவிஞர்கள் பங்கேற்ற கவிதை நிகழ்ச்சி கவர்னர் தொடங்கி வைத்தார்

இந்திய வானொலி நிலையம் சார்பில்
சென்னையில், 22 மொழி கவிஞர்கள் பங்கேற்ற கவிதை நிகழ்ச்சி
கவர்னர் தொடங்கி வைத்தார்
இந்திய வானொலி நிலையம் சார்பில் 22 மொழி கவிஞர்கள் பங்கேற்ற கவிதை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி இந்திய வானொலி நிலையம் சார்பில் அகில பாரத கவி சம்மேளனம் என்ற பெயரில் பன்மொழி கவியரங்கத்தை நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு அகில பாரத கவி சம்மேளனம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.

அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தென்மண்டல கூடுதல் தலைமை இயக்குனர் ராம்குமார் உபாத்யாய் தலைமை தாங்கினார். அகில இந்திய வானொலி தலைமை இயக்குனர் பயாஸ் செகரியார், சென்னை நிலைய இயக்குனர் வி.சக்ரவர்த்தி, கூடுதல் தலைமை இயக்குனர்கள் (பொறியியல்) ராமச்சந்திரன், தியாகராஜன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மொழி நல்லிணக்கம்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கவியரங்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “பன்மொழி கவிஞர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி மொழி நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகும். திருவள்ளுவர், மகாகவி பாரதி, அவ்வையார் போன்ற ஒப்பற்ற கவிஞர்களால் தமிழ் மொழியின் மேன்மை இன்னும் உலக நாடுகளால் பறைசாற்றப்படுகிறது”, என்றார்.

கவியரங்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், சமஸ்கிருதம் உள்பட 22 மொழி கவிஞர்கள் பங்கேற்று கவிதைகள் அரங்கேற்றி னர். இது தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.திலகவதி, முனைவர்கள் ம.ராஜேந்திரன், ஆர்.ராஜகோபாலன், மின்னூர் ஸ்ரீனிவாசன், ஆர்.சிவகுமார், என்.வி.சுப்பராமன், எழில்வேந்தன் உள்பட 21 பேர் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களாக பங்கேற்றனர்.

சென்னையில் முதல்முறை

முன்னதாக கவியரங்கத்தில் பங்கேற்ற கவிஞர்களுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொன்னாடை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் கவுரவித்தார்.

இந்திய வானொலி நிலையம் நடத்தி வரும் அகில பாரத கவி சம்மேளன நிகழ்ச்சி, சென்னையில் அரங்கேறியது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2½ லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னையில் 23, 24-ந் தேதிகளில் நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2½ லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
2. சென்னையில் ‘லிப்ட்’ கொடுப்பதுபோல் நடித்து 200 முதியவர்களிடம் நகை-பணம் பறித்தவர் கைது
சென்னையில் ‘லிப்ட்’ கொடுப்பதுபோல் நடித்து 200 முதியவர்களிடம் நகை, பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
3. சென்னையில் மாரத்தான் ஓட்டம் கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி வாயை கட்டிக்கொண்டு ஓடினார்
தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தடைக்கு ஆதரவாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையில் நேற்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
4. கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர்
கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஆசிரியர்கள், அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று நேற்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
5. சென்னையில் ‘ஜம்போ சர்க்கஸ்’: அந்தரத்தில் துள்ளி குதிக்கும் சாகச பெண்கள் உடலை வில்லாக வளைத்து கலைஞர்கள் அசத்தல்
சென்னையில் நடந்து வரும் ‘ஜம்போ சர்க்கஸ்’ நிகழ்ச்சியில், அந்தரத்தில் துள்ளி குதித்து இளம்பெண்கள் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடலை வில்லாக வளைத்து தங்கள் திறமையால் பார்வையாளர்களை சர்க்கஸ் கலைஞர்கள் அசத்தி வருகின்றனர்.