மாநில செய்திகள்

மதுரை அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடங்கியது + "||" + Booking started for the jallikattu players

மதுரை அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடங்கியது

மதுரை அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடங்கியது
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு இன்று முன்பதிவு தொடங்கியது.800 பேர் பதிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை 

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஆகிய கிராமங்களில் வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா வாடிவாசலில் நடந்தது. 

 மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், மற்றும் அரசு அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டனர். 

இன்று மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் 18 முதல் 40 வயது உள்ளவராகவும். சீரான உடற்தகுதி உள்ளவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குறைந்தது 150செ.மீ உயரமும், உயரத்திற்க்கு ஏற்ற எடையும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் 5 மருத்துவர்கள் கொண்ட 10 மருத்துவ குழுக்கள் இப்பணியில் ஈடுப்பட்டுவருகின்றனர். 800 மாடுபிடி வீரர்கள் இன்று பதிவு செய்யப்படுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 71 பேர் காயம்
மணப்பாறையை அடுத்த ஆவாரங்காட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 71 பேர் காயமடைந்தனர்.
2. பாலமேட்டில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதில் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு சிறப்பு பெற்றது.
3. பிரசித்திப்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது
மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் போட்டியை தொடங்கி வைத்தார்.
4. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.முதல் சுற்றில் 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
5. ஜல்லிக்கட்டு ரத்து எதிரொலி: நடுரோட்டில் காளைகளை அவிழ்த்து விட்ட இளைஞர்கள்
ஜல்லிக்கட்டு ரத்து எதிரொலியால் நடுரோட்டில் காளைகளை இளைஞர்கள் அவிழ்த்து விட்டனர்.