மாநில செய்திகள்

40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் திருநாவுக்கரசர் பேட்டி + "||" + In the 40 parliamentary constituencies DMK, Congress Alliance Interview with Thirunavukkarasar

40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் திருநாவுக்கரசர் பேட்டி

40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் திருநாவுக்கரசர் பேட்டி
40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கேஸ்.இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் உத்தரவின்படி நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் மேலாண்மை குழு உள்பட பல்வேறு குழுக்களை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதுபோன்று இன்னும் பல்வேறு கட்டங்களாக கூட்டம் நடத்தப்படும். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பலமாகவும், வலுவாகவும் இருக்கிறது. இந்த கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும்.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை கண்டறிந்து, குடிநீர் வசதி உள்பட பல்வேறு மேம்பட்ட வசதிகளை அரசு செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர். இதேபோல தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, பொருளாளர் நாசே ராமச்சந்திரன், முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவிப்பு
உழவர் உழைப்பாளர் கட்சி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் என்று கட்சியின் மாநில தலைவர் கு.செல்லமுத்து அறிவித்துள்ளார்.
2. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை; கிராம சபைக் கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. உறுதி
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. சார்பில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
3. தமிழகத்தில் தாமரை மலரும்: மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
தமிழகத்தில்தாமரை மலரும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
4. திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் வருகிற 8-ந்தேதி ஊராட்சி சபை கூட்டம் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் வருகிற 8-ந் தேதி நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
5. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
“தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது“ என்று மதுரையில் அளித்த பேட்டியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.