விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Jan 2019 10:53 PM GMT (Updated: 14 Jan 2019 10:53 PM GMT)

தர்மபுரியில் தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர் விஜயகாந்த், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக அமைச்சர்கள் தொடர்பாக சில கருத்துகளை பேசினார்.

புதுடெல்லி,

விஜயகாந்த் மீது  தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட செசன்சு கோர்ட்டு, விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 2015–ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து விஜயகாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் 20–ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், விஜயகாந்துக்கு எதிரான அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை விதித்தும், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ், ‘தான் ஏற்கனவே இந்த வழக்கில் வக்கீலாக ஆஜராகி இருப்பதால் இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்கும்’ என்று உத்தரவிட்டார்.


Next Story