கோடநாடு வீடியோ விவகாரம்: தி.மு.கவை தொடர்ந்து அ.தி.மு.க குழுவினர் கவர்னரை இன்று சந்தித்தனர்


கோடநாடு வீடியோ விவகாரம்: தி.மு.கவை தொடர்ந்து அ.தி.மு.க குழுவினர் கவர்னரை இன்று சந்தித்தனர்
x
தினத்தந்தி 15 Jan 2019 10:36 AM GMT (Updated: 15 Jan 2019 10:36 AM GMT)

கோடநாடு வீடியோ விவகாரத்தில் தி.மு.க தலைஅவர் மு.கஸ்டாலின் சந்திப்பை தொடர்ந்து அ.தி.முக குழுவும் இன்று கவர்னரை சந்தித்தது.

சென்னை.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின. 

இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டினார்கள்.மேலும் கோடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இந்த நிலையில்,  கோடநாடு விவகாரம் தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அவருடன் டி.ஆர். பாலு,  கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் உடன் சென்றனர்.

கொடநாடு விவகாரம் தொடர்பாக கவர்னரிடம் நேரில் முறையிட்டார்.  கோடநாடு  கொலை கொள்ளை வீடியோ விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக்கோரி மனு அளித்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளிக்கும் போது ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என் அகூரினார்.

இந்த நிலையில் அ.தி.மு.க  துணை அமைப்பாளர்கள்  கே.பி.முனுசாமி, -வைத்தியலிங்கம் எம். பி, ஜெயவர்தன் எம்.பி. மற்றும் அனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று  சென்னையில் கிண்டியில் உள்ல கவர்னர்  மாளிகையில் கவர்னர்  பன்வாரிலாலை சந்தித்தனர்.

Next Story