தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது மதுவிலக்கு அவசியம் தேவை -கவிஞர் வைரமுத்து


தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது மதுவிலக்கு அவசியம் தேவை -கவிஞர் வைரமுத்து
x
தினத்தந்தி 16 Jan 2019 5:52 AM GMT (Updated: 16 Jan 2019 5:52 AM GMT)

தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அவசியம் தேவை என திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் கவிஞர் வைரமுத்து கூறினார்.

சென்னை

திருவள்ளுவர்  தினத்தை முன்னிட்டு இன்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அவசியம் தேவை. உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு செய்தது, கால் நூற்றாண்டு வரை சமூக நீதிக்காக போராடிய தமிழ் தலைவர்களுக்கு தோல்வி.

10% இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூகநீதிக்கு எதிரானது. கிராமங்களில் அதிகமாக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை குறைய மதுவே காரணம். தமிழக அரசின் வருமானத்துக்காக 20% மக்கள் மதுபோதையில் மயங்கி கிடக்க வேண்டுமா?  என கூறினார்.

Next Story