அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் -அமைச்சர் ஜெயக்குமார்


அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 16 Jan 2019 6:22 AM GMT (Updated: 16 Jan 2019 6:30 AM GMT)

அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை

மெரினாவில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது உறுதி. அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நோக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார்.

தமிழ்நாட்டில் மதுவை கொண்டு வந்ததே திமுகதான். ஒரே நாளில் முழு மதுவிலக்கை கொண்டுவர முடியாது. மதுவின் தீங்கு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என கூறினார்.

Next Story