மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது


மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது
x
தினத்தந்தி 16 Jan 2019 11:29 AM GMT (Updated: 16 Jan 2019 11:29 AM GMT)

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

மதுரை,

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது.  இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக 533 காளைகள் வந்தன.  இவற்றில் 475 காளைகள் போட்டியில் பங்கேற்றன.  150 காளைகள், வீரர்களிடம் பிடிபட்டன.  550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.  ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், 2வது நாளாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கியது.  இதனை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  போட்டியில் 988 காளைகளும், 846 வீரர்களும் பங்கேற்றனர்.  1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.  இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்து உள்ளது.

Next Story